வேல்ஸ் திட்டம்- வடக்கு அயர்லாந்துக்கு பொருந்தாது என பிரித்தானிய அரசு அறிவிப்பு
வேல்ஸ் அரசாங்கத்தை தவிர்த்து வேல்ஸில் முன்னெடுக்கும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டம், வடக்கு அயர்லாந்துக்கு பொருந்தாது என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
நகர மைய மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வேல்ஸில் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை
பிரித்தானிய அரசு தானே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் வடக்கு அயர்லாந்துக்கு வழங்கப்படும் நிதியை, அங்குள்ள நிர்வாகக் குழுவே முழுமையாக கட்டுப்படுத்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக, வேல்ஸ் அமைச்சர்களைத் தாண்டி அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக கூறி, 11 தொழிலாளர் கட்சி அரசியல்வாதிகள்,
பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஸ்டார்மர், தாம் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாளரே என்று கூறியதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.





