தமிழ்நாடு

வேலை நேரத்தை உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு – பணிபகிஸ்கரிப்பை அறிவித்த தொழிற்சங்கங்கள்!

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,   இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  ம.தி.மு.க.,  வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் திகதி  தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

சிஐடியூ மற்றும் ஏஐடியூசிஇ எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிக்ள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் திகதி  வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!