விசா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும் போது 30 நாள் வீசாவிற்கு ஒரு நபருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தையே பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசாவை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவுத் திணைக்களம் ஏற்கும்.
(Visited 19 times, 1 visits today)