வவுனியா ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார்.
எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார்.
இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைப்பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் 29 வயது மதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)