ஐரோப்பா செய்தி

ராகுல் காந்தி பதவி நீக்கம்; லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு(52) குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது MP பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள்.

தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அங்கு சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, லண்டனில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவினர் அங்குள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக பாதகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!