மொராக்கோவில் பெரும் வெள்ளம் – 37 பேர் உயிரிழப்பு
மொராக்கோவின் அட்லாண்டிக் கடலோர மாகாணமான சஃபியில் வெள்ளம் காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக (Safi) சஃபி நகரத்தின் வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 70 வீடுகள் மற்றும் வணிகங்கள்
முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பெர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சஃபி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாதுகாக்கவும், குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





