மார்செய்யில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்
பிரான்சின் மார்செய்லின் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஆறு பேர் காயமடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் இடிபாட்டில் மேலும் மேலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை பிரான்ஸ் தீயணைப்பு படையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த அனர்தத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்ததினால் குறித்த கட்டிடத்தில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது மீட்பு முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது என்று அப்பகுதி மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கட்டிடத்தின் இடிபாட்டை அடுத்து அருகில் இருந்த இரண்டு கட்டிடங்கள் பகுதியளவில் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கடினமான சூழ்நிலைக்கு நாங்கள் தயாராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்று பயான் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்த ஆறு பேரில் ஐந்து பேர் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
தீயணைப்புப் படையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் 80 பேர் வெளியேற்றப்பட்டதாக மீட்பு சேவைகள் தெரிவிக்கின்றன.