மக்ரோனின் முதன்மையான ஓய்வூதிய சீர்திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும்
பல மாதங்களாக வீதி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் இருந்தபோதிலும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முதன்மையான ஓய்வூதிய சீர்திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் ஓய்வூதியம் பெறக்கூடிய வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்தும் சட்டம், செல்வாக்கற்றதாகவே உள்ளது, மேலும் அரசியலமைப்புச் சபையின் முடிவு அறிவிக்கப்பட்டபோது தன்னியல்பான எதிர்ப்புகள் வெடித்தன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் சிட்டி ஹாலுக்கு வெளியே கூடி நின்ற எதிர்ப்பாளர்கள்,சீர்திருத்தம் திரும்பப் பெறும் வரை வேலைநிறுத்தங்களுக்கு முடிவு இல்லை என்ற பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரவையின் தீர்ப்பு மக்ரோன் மற்றும் அவரது சீர்திருத்தம் மீதான பரவலான கோபத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.