ஐரோப்பா செய்தி

போரில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க அறிமுகமாகும் செயலி

உக்ரைன் போரில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது.

ரஷ்யா உக்ரைனுக்கு இடையேயான போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 19 ஆயிரத்துக்கும் மேலான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியுள்ளது.

அதில், 328 குழந்தைகள் மட்டுமே இதுவரைக்கும் மீட்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த ரஷ்யா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக தெரிவித்தது.

இதற்கிடையே உக்ரைன் சார்பில் குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ரஷ்யா ஆஜராகாததால் அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து அவரவரின் பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் அரசிங்கம் தெரிவித்ததாவது:- அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!