செய்தி தமிழ்நாடு

பெண்களை கிண்டல் செய்த பிஜேபி வாலிபர்கள்

பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு மதுபோதையில் பிஜேபியை சேர்ந்த வாலிபர்கள்  பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பிஜேபி யினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு.

பல்லாவரத்தில் உள்ள திடலில் இன்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி  தொடங்கி வைத்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  பிஜேபி வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த தகவல் அறிந்து பல்லாவரம் காவல் நிலையத்தை 100க்கும் மேற்பட்ட பிஜேபி நிர்வாகிகள் முற்றுகையிட்டு சிறுவர்களை கைது செய்ததற்கான காரணம் மற்றும் விசரானை என்ற பெயரில் தாக்கியதாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து  வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீர பாண்டியனை சுற்றி வளைத்த பிஜேபியினர் போலீசார்  வாலிபர்களை தாக்கியது குறித்து விளக்கமளிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரும் வெளியேறும்படியும் தானே விசாரனை செய்வதாக கடுமையாக கடுந்து கொண்டார் இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மூன்று பிஜேபி இளைஞர்களையும் துணை ஆணையர் விடுவித்தார்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!