செய்தி தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம்(TNTSWA) சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் திரு அர்ஜுன் அவர்கள் 03/03/23 அன்று சமூக விரோதிகளால்  பெட்ரோல் குண்டு வீச்சிக்கு  தாக்குதலாகி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று(15/03/23) இயற்கை  எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும்  வருந்துகிறோம் இந்த தாக்குதலை கண்டித்து

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள்  நலச் சங்கம்(TNTSWA) சார்பாக 08/03/23 அன்று மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் திரு.கு.பாரதி அவர்களின் தலைமையில்  ஆர்ப்பாட்டம் செய்தோம்.

ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட தோழருக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில சிறப்பு தலைவர் தோழர்.கு.பாரதி அவர்கள் தலைமையில்  திரு.மேலாண்மை இயக்குநர் அவர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது,

இன்று அவர் இயற்கை எய்திய  காரணத்தால் *அவரது குடும்பத்திற்கு தமிழகஅரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.

அவரது குழந்தைகளுக்கு இறுதி படிப்பு வரை நிர்வாகமே முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்கம்(TNTSWA) சார்பில் வேண்டி  வலியுறுத்துகிறது மேலும் இன்று(15/3/23 )

மாலை 6.00மணி அளவில் அனைத்து டாஸ்மாக் கடை முன்பும் மெழுகுவர்த்தி ஏந்தி திரு அர்ஜுன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் நல சங்கம்(TNTSWA) சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!