பூட்ஸ் (Boots ) பெயரில் மோசடி: சமூக வலைதளங்களில் உலவும் ஆபத்தான போலி மருத்துவ விளம்பரங்கள்!
டிக்டொக் (TikTok ) தளம் பிரபல பிரித்தானிய மருந்தகமான Boots நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திப் பரப்பப்பட்ட போலி எடை குறைப்பு விளம்பரங்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
சமீபகாலமாக டிக்டொக் (TikTok )-ல் அட்பூட்ஸ் ஒபிசியல் (@BootsOfficial ) என்ற பெயரில் ஒரு போலி கணக்கு (Fake Account) செயல்பட்டு வந்தது. இந்தக் கணக்கு, பூட்ஸ் (Boots) நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்ற உருவங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி எடை குறைப்பு மருந்துகளை விளம்பரப்படுத்தியது.
அந்த விளம்பரங்களில் வரும் நபர்கள் நிஜமானவர்கள் அல்ல. அவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் சிரித்துக் கொண்டே ஒரு நீல நிற திரவத்தை (Blue liquid) குடிப்பது போலவும். அடுத்த சில மாதங்களில் உடல் எடை பெருமளவு குறைந்தது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதில் அதிர்ச்சி தரும் சலுகைகள்”இன்று மட்டும் 70% தள்ளுபடி” போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி மக்களின் ஆவலை தூண்டின. மேலும், மருத்துவரின் சீட்டு (Prescription) இருந்தால் மட்டுமே வாங்கக்கூடிய எடை குறைப்பு மருந்துகளை, எந்தவித கட்டுப்பாடும் இன்றி விற்க முயன்றது. இது கண்டறியப்பட்டது.
உண்மையான பூட்ஸ் ( Boots ) நிறுவனம் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கான அட்பூட்ஸ்யூகே (@BootsUK) இது குறித்து டிக்டொக் ( TikTok )-இடம் புகார் அளித்தது.
முதல் தடவை அந்த குறிப்பிட்ட விளம்பர வீடியோக்களை (TikTok ) நீக்கியது.
வீடியோக்கள் நீக்கப்பட்டாலும், அந்த போலி கணக்கு மீண்டும் அதே வீடியோக்களைப் பதிவேற்றியது.
இறுதியாக, அந்த போலி கணக்கை ஹாங் ஹாங் (Hong Kong)-ல் இருந்து இயக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. தற்போது டிக் டொக் (TikTok) அந்த கணக்கை நிரந்தரமாகத் தடை செய்துள்ளது.
இத்தகைய போலி விளம்பரங்கள் மூலம் விற்கப்படும் மருந்துகள் என்னென்ன வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன என்று தெரியாது. இது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பொதுமக்களுக்கு நேரடியாக விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
சமூக வலைதளங்களில் “ஒரே வாரத்தில் எடை குறையும்” என பிரபல நிறுவனங்களின் பெயரில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், மருந்துகளைப் பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





