ஐரோப்பா செய்தி

புட்டினை துரத்தும் 2 அச்சங்கள் – அம்பலப்படுத்திய மெய்க்காப்பாளர்

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை துரத்தும் 2 பிரதான அச்சங்கள் குறித்து அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் ஒருவர் தகவல் பகிர்ந்திருக்கிறார்.

நேட்டோ நாடுகளுடன் ஆரம்பம் முதலே மோதல் போக்கை கொண்டிருக்கும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் அதிகம்.

அதிலும் உக்ரைன் போர் தொடங்கியது முதல் புட்டின் உயிருக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக புட்டினின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான கிளேப் கரகுலோவ், பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவுக்கு வெளியே ரகசியமாக தற்போது வாழ்ந்து வருகிறார்.

எதிரிகளால் புட்டினுக்கு உயிரச்சம் நிலவினாலும், புதினைப் பொறுத்தவரை கொரோனா பரவலுக்கே அவர் அதிகம் அச்சம் கொண்டுள்ளார். இதனால் சதா தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, அவருக்கான சேவகத்தில் பணிக்கப்படுவோரும் கடுமையான மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். புட்டினின் அலுவலகம் முதல் வீடு வரை இந்த கொரோனா அச்சத்துக்கே முதலிடம் தருகிறார்.

அடுத்தபடியாகவே புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வருகின்றன. உச்ச அச்சுறுத்தலுக்கான உலகத் தலைவர்களில் புட்டினும் ஒருவராகும். எனவே அவரது பாதுகாப்புக்கு என்றே தனிப்பட்ட தகவல் தொடர்பு முதல் அரண் அடுக்குகள் வரை அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.

பயணத்துக்கும் கூட, பிரத்யேக விமானம் போல, அதிபர் புட்டினுக்கு என பிரத்யேக ரயிலும் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு கொரோனா, உயிருக்கு ஆபத்து என 2 அச்சங்கள் புட்டினை அலைக்கழித்து வருவதாக, அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி