ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் யுவதிக்கு காதலன் செய்த கொடூரம்

பிரான்ஸில் 2004 ஆம் ஆண்டு பிறந்த இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அவரது முன்னாள் காதலன் தேடப்பட்டு வருகிறார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு La Baulne (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றனர்.

19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் சந்தேக நபராக அவரது 29 வயதுடைய முன்னாள் காதலன் தேடப்பட்டு வருகிறார். அவரை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி