ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பொலிஸாரிடம் இருந்து தப்ப இளைஞன் செய்த செயல் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

பிரான்ஸில் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் இளைஞன் ஒருவன் ஆற்றில் பாய்ந்துள்ளார். ஏப்ரல் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து இதுவரை இளைஞன் தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

வாகன ஒன்றை திருடிய சந்தேகத்தில் குறித்த 17 வயதுடைய இளைஞன் மற்றும் அவனது சகோதரர்கள் இருவர் Strasbourg நகர பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் திகதி அவர்கள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யும் நோக்கில் அவர்களை துரத்திச் சென்றனர்.

பொலிஸாரிடம்இருந்து தப்பிச் சென்ற இளைஞர்களில் ஒருவன், அங்குள்ள ஆறு ஒன்றுக்குள் பாய்ந்து மாயமாகியுள்ளார்.

பொலிஸார் நீண்டநேரமாக தேடியும் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சம்பவ நாளில் இருந்து இதுவரை குறித்த இளைஞன் தொடர்பாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அதையடுத்து, பொலிஸார் மீது இளைஞனின் குடும்பத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தங்களது மகனை பொலிஸார் பாதுகாக்க தவறிவிட்டனர் என குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கு தொடர்பில் Strasbourg நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி