ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் கட்டிடத்தின் 6வது தளத்தில் இருந்து விழுந்து சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை பிற்பகல் இச்சம்பவம் பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவன் ஒருவனே கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்துள்ளார்.

அதே கட்டிடத்தில் வசிக்கும் விடுமுறையில் இருந்த தீயணைப்பு படை வீரர் ஒருவர் உடனடியாக சக அதிகாரிகளை அழைத்தது.

அத்துடன், முதலுதவி சிகிச்சைகளையும் ஆரம்பித்தார். இருந்தபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் பணிக்குச் சென்றிருந்த வேளையில், வீட்டில் தனியாக நின்றிருந்த குறித்த சிறுவன் பல்கனி ஊடாக தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி