ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணைந்த பின்லாந்து : வான் பாதுகாப்பை வலுப்படுத்;தும் ரஷ்யா!

பின்லாந்து நேட்டோவுடன் இணைக்கப்பட்ட பிறகு வான் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

நேட்டோ கூட்டணியில் பின்லாந்து இணைந்ததற்கு பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ரஷ்யா கூறுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளப் படைகளின் துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரி டெமின், ரஷ்ய வான் பாதுகாப்பு பல சவால்களை எதிர்கொள்வதாக கூறினார்.

இதனால் ரஷ்யா 50இற்கும் மேற்பட்ட மொபைல் ரேடார் நிலையங்களைச் சேர்த்துள்ளதாகவும், ஏ-50 முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள், 24 மணி நேரமும் ரோந்து பணியில், ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதுகாப்பு விடயங்களில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி