நாளொன்றுக்கு 10 மணித்தியாளங்கள் மின் வெட்டை அமுல்படுத்தும் தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்கா மோசமான மின் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் மின்சாரம் தடைபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிகளை சரிசெய்வதற்காக அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவர அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மின்சாரத்துறைக்கு புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும், புதிய அமைச்சர் மின்வெட்டுக்களை கையாள்வதில் மட்டுமே கவனம் செலுத்துவார் எனவும் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் அரசுக்குச் சொந்தமான மின்சாரப் பயன்பாட்டு நிறுவனமான எஸ்காம் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் மின்வெட்டுகளை அமல்படுத்தியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)