உலகம் ஐரோப்பா

துருக்கியில் கோர விபத்து: சுவிட்சர்லாந்து தமிழர்கள் மூவர் உயிரிழப்பு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாயாரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சுவிற்சர்லாந்திற்குத் திரும்புவதற்காக விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60 வயது),அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28 வயது) மற்றும் அவா்களுடன் பயணித்த சிவாஸ்கரன் சுகந்தி (47 வயது): ஆகியோரே உயிரிழந்துள்ளனா்.

உயிரிழந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் அவர்களின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவே இவர்கள் துருக்கி நாட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு, மீண்டும் சுவிற்சர்லாந்திற்குத் திரும்புவதற்காக டாக்ஸி வாகனத்தில் விமான நிலையத்திற்குப் பயணம் செய்துகொண்டிருந்த வேளையிலேயெ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் இவர்கள் பயணித்த டாக்ஸி வாகனம் மிகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. விபத்தின் கோரத்தினால் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்தான்புல்லின் பெண்டிக் பகுதியில் உள்ள குர்த்கோய் இணைப்புச் சாலையில், காலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக வழுவழுப்பாக மாறியிருந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு டாக்சி கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் காலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்தது. கூறப்படும் தகவலின்படி, மூன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த டாக்சி ஓட்டுநர், ஈரமான சாலையில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.

விபத்தை நேரில் கண்ட குடிமக்களின் தகவல்களைத் தொடர்ந்து, தீயணைப்பு, காவல்துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. வாகனத்தில் சிக்கியிருந்த ஒருவர் அக்குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் தடயவியல் மருத்துவப் பிணக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் ஒரு சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததை சுவிஸ் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகம் ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்துத் துருக்கி நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினா் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இஸ்தான்புல்லில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், துருக்கி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Your Heading Text Here

AJ

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!