தரமற்ற கழிவுநீர் கால்வாய் குடிநீருடன் கலக்கும் சாக்கடை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் ஊராட்சியில் தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
அரியாகுஞ்சூர் ஊராட்சியில் இருளர் சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒப்பந்தம் பெற்ற அரசு ஒப்பந்ததாரர் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு 20 நாட்களே ஆன நிலையில் காலால் தேய்தாலே பவுடர் போல பறக்கும் நிலையை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைத்துள்ளதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரையிலும் வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்
மேலும் வீட்டிற்கு ஒரு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவு நீர் கால்வாயோடு சேர்த்து பழுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்தால் எப்படி தெரியும் என அப்பகுதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
இது போல தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைத்த அரசு ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தரமான கழிவு நீர் கால்வாய் மற்றும் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்