செய்தி தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் கவலையளிக்கின்றன – ஸ்டாலின்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகுந்த கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு கோடியக்கரை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் சிலரின் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் நான்கு மீனவர்களுக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்கு சொந்தமான ஏழு தொலைபேசிகளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

எனவே, இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!