ஜெர்மனி மக்களுக்கு விஷேட நிதி உதவி – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
ஜெர்மனியில் வெப்ப மூட்டிகளுக்கு விஷேட நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க கூடிய எரி பொருட்களை வெப்ப மூட்டிகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை இயற்றி இருக்கின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சட்டமானது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு இருக்கின்றது.
இந்த புதிய சட்டத்தின் படி எரிப்பொருட்களை பாவணைக்கு உட்படுத்தும் பொழுது ஆக கூடியது 65 சதவீதமான சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற சக்திகளை பயன்படுத்த வேண்டும் என்பது சட்டத்தின் விளக்கம் ஆகும்.
இதன் காரணத்தினால் பல வெப்ப மூட்டிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கமானது 70 சதவீதமான செலவுகளை இவ்வாறு இந்த வெப்ப மூட்டிகளை மாற்றுவதற்கு ஏற்படும் பொழுது பொறுப்பு ஏற்க இருக்கின்றது.
(Visited 2 times, 1 visits today)