ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் திருமணமானவர்களுக்கு முக்கிய தகவல் – அமுலாகும் சட்டம்

ஜெர்மனியில் திருமணமானவர்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டம் தொடர்பான விடயம் தற்பொழுது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் திருமணம் பந்தத்தில் புதிய சட்டத்தில் திருத்தங்கள் ஒன்று கொண்டுவரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகிய நிலையில் அவை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஜெர்மனியில் திருமணம் முடித்த ஆண் அல்லது பெண்ணானவர் டொப்பில்னாம் என்று சொல்லப்படுகின்ற ஆண்னுடைய குடும்ப பெயரையும் பெண்ணின் குடும்ப பெயரையும் ஒரு நபர் வைக்க கூடிய வகையில் இப்பொழுது சட்டம் அமுலில் இருக்கின்றது.

இதேவேளையில் எதிர்வரும் காலங்களில் திருமணம் முடித்த பிறகு ஆணும் பெண்ணும் ஒரோ டொப்பில்னாம் என்று சொல்லப்படுகின்ற இரண்டு குடும்ப பெயர்களை சேர்த்து வைக்கின்ற முறை ஒன்று அமுல்படுத்தவுள்ளது.

ஜெர்மனியின் நீதி மந்திரி  மாக் கோ புஷ்மன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் பிறக்கின்ற குழந்தைகளுக்கு கூட இந்த டொப்பில்னாம்  என்று சொல்லப்படுகின்ற இரண்டு குடும்ப பெயர்களை ஒன்று சேர்த்து வைக்கின்ற நடைமுறையும் அவர்கள் வெகுவிரைவில் கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கருத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

ஜெர்மனியில் கூடுதலானவர்கள் திருமண முறிவுகள் ஏற்படுகின்ற காரணத்தினால் திருமண முறிவின் பின் பலர் தமது பழைய குடும்ப பெயருக்கே மாறி செல்வதாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிள்ளைகளும் விரும்பியவாறு பழைய குடும்ப பெயரை எடுக்க கூடிய வகையில் புதிய சட்டத்தில் திருத்தங்கள் ஒன்று கொண்டுவரவுள்ளதாகவும் அவர் மேலும் முன்மொழிந்து இருக்கின்றார்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி