ஜெர்மனியில் அடையாள அட்டையால் ஏற்பட்ட குழப்பம்
ஜெர்மனியில் அடையாள அட்டை வழங்க மறுக்கப்பட்டமைக்கு எதிராக நபர் ஒருவர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்குதல் செய்துள்ளார்.
அடையாள அட்டைக்காக கையடையாளத்தை வழங்க மறுத்த நபருக்கு, அட்டையை வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளது. பீஸ்பாடலின் நகர நிர்வாகவே அடையாள அட்டையை வழங்க மறுத்தள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமையினால், அது ஐரோப்பிய நீதிமன்றம் வரை செல்லவுள்ளது.
ஜெர்மன் நடைமுறைக்கு அமைய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கையொப்பம் வழங்கப்படுவது கட்டமாயமாகும். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத நபர் ஒருவர் பீஸ்பாடலின் உள்ள நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நிர்வாக நீதிமன்றமானது இந்த வழக்கு விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை வழங்க முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக ஐரோப்பாவிற்கு பொறுப்பான உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நிர்வாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் மக்கள் அடையாள அட்டையை பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு வழங்குவது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.