சீனா-பேண்ட் பாக்கெட்டில் வைத்து பாம்புக் குட்டிகளைக் கடத்த முயன்றவர் கைது!

சீனா – ஹாங்காங் எல்லையில் அமைந்துள்ள ஃபுடியன் துறைமுகத்தின் நுழைவாயிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் பதற்றத்துடன் நடந்து வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது 14 பாம்பு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அந்த நபரை கைது செய்த அதிகாரிகள் பாம்புகளை பறிமுதல் செய்தனர்.அதில் உள்ள 3 மலைப்பாம்புகுட்டிகள் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 18 times, 1 visits today)