சாம்சங்கின் முதல் பல-மடிப்பு கையடக்க தொலைபேசி அறிமுகம்
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) நிறுவனம், தனது முதல் பல-மடிப்பு (multi-folding) ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியைஇன்று(டிசம்பர் 2) அறிமுகப்படுத்தியது.
பலவாறு போட்டி தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் தொலைபேசிச் சந்தைத்துறையில் தனது நிலையை வலுப்படுத்த சாம்சங் இந்த முயற்சியை எடுத்துள்ளது.
சாம்சங்கின்புதிய கலக்ஸி Z ட்ரைஃபோல்ட் (Galaxy Z TriFold) அறிமுகம், சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் மடிக்கக்கூடிய தொலைபேசி சந்தையில் சாம்சங் தன்னை வலுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த வகை மூன்று தட்டுகளை பயன்படுத்தி, சுமார் 253.1 மில்லிமீட்டர் (10அங்குளம்) திரையாக விரிகிறது.
இது சாம்சங்கின் சமீபத்திய மடிக்கக்கூடிய கேலக்ஸி Z ஃபோல்ட் 7 (Galaxy Z Fold 7 ) மாடலை விட கிட்டத்தட்ட 25% பெரியதாகும்.
இதன் விலை சுமார் $2,440.17 அமெரிக்கா டொலர் ஆகும்.
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் அலெக்ஸ் லிம் (Alex Lim) கூறுகையில், “மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைத்தொலைபேசி சந்தை தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன்.
குறிப்பாக, ட்ரைஃபோல்ட் (TriFold)இந்தப் பிரிவில் மிகவும் வேகமான வளர்ச்சியைத் தூண்டும் ஒரு உந்து கோலாக (catalyst) விளங்கும் ” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைத்தொலைபேசி, அதிக அளவில் விற்கப்படும் (volume driver) முதன்மை மாடலாக இல்லாமல், குறிப்பாக இதை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டது என்றும் லிம் (Alex Lim) கூறினார்.
தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரைஃபோல்ட்(TriFold), டிசம்பர் 12 ஆம் தேதி உள்நாட்டில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த ஆண்டுக்குள் சீனா, சிங்கப்பூர், தைவான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வெளியிடப்படும்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிட வாய்ப்புள்ளது.
இந்தச் சாதனத்தில் சாம்சங்கின் முதன்மை மாடல்களிலேயே மிகப்பெரிய பேட்டரி உள்ளதுடன்,அதி-வேக மின்னேற்ற(super-fast charging) வசதியை கொண்டது. இது 30 நிமிடங்களில் 50%வேகத்தில் மின்னேறும் (fast charging) திறன் கொண்டது.
நினைவக சில்லுகள் (memory chips) மற்றும் பிற பாகங்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளதால், விலையை நிர்ணயிப்பது “கடினமான முடிவாக” இருந்தது என்று லிம் குறிப்பிட்டார்.
ஆய்வாளர்களின் கணிப்புப்படி, ட்ரைஃபோல்ட்(TriFold) அதிக அளவில் விற்பனையாகும் முதன்மை மாடலை விட, புதிய தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சிப் பொருளாகவே (showcase) இருக்க வாய்ப்புள்ளது.
NH இன்வெஸ்ட்மென்ட் & செக்யூரிட்டிஸின் மூத்த ஆய்வாளர் ரியு யங்-ஹோ(Ryu Young-ho), ட்ரைஃபோல்ட்(TriFold), ஒரு முதல் தலைமுறை தயாரிப்பு என்பதால், “முழுமையான அல்லது நீடித்துழைப்பு (completeness or durability) ஆகியவற்றில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்” என்று எச்சரித்துள்ளார்.
சீனாவின் ஹவாய் (Huawei) நிறுவனம் கடந்த செப்டம்பரில் தொழில்துறையின் முதல் மூன்று வழி மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்திய நிலையில், ஆப்பிள் (Apple) நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் மடிக்கக்கூடிய சாதனத்தை வெளியிட வாய்ப்புள்ளதால், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் (Counterpoint Research) படி, இந்த ஆண்டு மொத்த ஸ்மார்ட் தொலைபேசியை சந்தையில் மடிக்கக்கூடிய தொலைபேசி 2%க்கும் குறைவாகவே இருக்கும். 2027 ஆம் ஆண்டுக்குள் இது 3% க்கும் குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது அதிக விலை மற்றும் மொத்த உற்பத்தி வரைமுறை காரணமாக இருக்கலாம்.




