சாக்கடல் போல இந்த ஏரியிலும் நீங்கள் மூழ்காமல் மிதக்கலாம் : எங்கு இருக்கிறது தெரியுமா?
நீச்சல் தெரியாது ஆனால் பெரிய நீர்நிலையில் குளிக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னதும் எல்லோர் நினைவிற்கு வரும் ஒரு பெயர் சவக்கடல், சாக்கடல், என்றெல்லாம் அழைக்கப்படும் னநயன ளநய. ஆனால் இந்த சாக்கடல் இல்லாமல் உலகில் உள்ள மற்றொரு நீந்த தேவை இல்லாத பெரிய நீர்நிலை இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதை இப்போது தெரிந்து கொள்வோம்.
சாக்கடலில் மூழ்காமல் மிதக்க காரணம்…
இஸ்ரேல், ஜோர்டான் எல்லை பகுதியில் அமைந்துள்ள சாக்கடலில், ஜோர்டான் நதி மற்றும் அதை சுற்றியுள்ள சிறு ஓடைகள் தண்ணீரை நிரப்புகிறது. எனினும், சுற்றி நிலம் இருப்பதால் தண்ணீர் கடலில் கலக்க வழியில்லை.
ஆவியாதல் மூலம் தண்ணீர் ஆவியாகிவிடுவதால் அதில் உள்ள உப்பு சவக்கடலிலேயே தங்கி விடுகிறது. அதனால் தண்ணீரில் உப்பின் தண்மை அதிகரித்துவிடுகிறது. அதனால் இந்தக் தண்ணீர் அடர்த்தி அதிகமாகி மனிதர்களை ஜாலியாக மிதக்கவைக்கிறது.
சாக்கடல் போல் உள்ள ஏரி
சாக்கடல் போலவே எகிப்து நாட்டின் மேற்கு சஹாரா பாலைவன பகுதியில் ஒரு ஏரி அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் எகிப்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அதன்படி நீங்கள் எகிப்திற்கு சென்றால் பிரமிடுகள், அரசர்களின் பள்ளத்தாக்கு மற்றும் லக்சர் மற்றும் அஸ்வானின் அற்புதமான கோயில்களை பார்வையிட முடியும்.
எகிப்து உலகப் பயணிகளுக்கு ஏற்ற இடமாகும். அதோடு இப்போது இந்த சிவா சோலையும் சிறந்த சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.
பாலைவனத்திற்கு அருகில் நீர் நிரம்பி பசுமையாக இருக்கும் இடத்தை தான் பாலைவன சோலை என்று சொல்வோம். பெரும்பாலும் இந்த சோலைகள் பனைமரம், கள்ளி போன்ற செடிகளால் சூழ்ந்திருக்கும். நன்னீர் ஊற்றுகள் மூலம் இந்த சோலைகளுக்கு நீர் கிடைக்கிறது. ஆனால் பாலைவனத்தின் தாதுக்கள் கலந்து உப்புத்தன்மை சேர்ந்துவிடும்.