கொலம்பியாவில் அவசர சுகாதார நிலை அறிவிப்பு – 34 பேர் மரணம்

கொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
கடந்த ஆண்டில் ஆரம்பமான இந்த தொற்றால் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, கொலம்பியா அரசாங்கம், நாட்டில் அவசர சுகாதார நிலையை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் அதன் முதற்கட்டத்திலேயே குணமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் சுமார் 15 சதவீதமானோர் இந்தத் தொற்றால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு, 10 முதல் 14 நாட்களுக்குள் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)