காவல்துறை கலந்துரையாடல் கூட்டம்
சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் குற்ற செயல்களை எப்படி தடுக்க வேண்டும் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் காவல்துறையினர் எப்படி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதைப் பற்றியும் கலந்துரையாடல் காவல்துறை இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,
என்று காவல் ஆணையாளர் உத்தரவிட்டு உள்ள நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சோறாச்சேரி கிராமத்தில் பூந்தமல்லி பாம்ஸ் குடியிருப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகிறனர்.
இப்பகுதியில் பட்டாபிராம் காவல் துறை ஆய்வாளர் பிரதிப் ராஜ் அவர்கள் தலைமையில் பொதுமக்களுடன், பூந்தமல்லி பம்ஸ் பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்,
அப்பகுதி மக்கள் கூறுகையில் இரவு பணியின் போது அதிக காவலர் பணியில் நியமிக்க வேண்டும் என்றும் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்துக்கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும்,
என்றும் தெரு நாய்களை முற்றிலும் தெருக்களில் சுற்றாமல் ப்ளூ கிராஸில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
ஆய்வாளர் பேசுகையில் விரைவில் மாநகராட்சி அலுவலகத்திலும் காவல்துறை உயர் அதிகாரிகளிலும் உங்களது கோரிக்கைகளை தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,
என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்ததுடன் அப்பகுதியில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டு குற்ற செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்,
பின்பு ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் காவலன் செயலை பற்றி எடுத்துரைத்ததுடன் அவர்களுக்கு அந்த செயலைப் பற்றி துல்லியமாக பயன்படுத்தும் விதத்தை கற்றுக் கொடுத்தார்,
பின்பு அவசர காலங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கு பயன்படுத்தும் தொலைபேசி எண்களை தெரிவித்ததுடன் உங்கள் பகுதியில் எந்த ஒரு புது நபர் சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்தால் காவல் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்,
என்றும் தொலைபேசி எண்களையும் கொடுத்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார் இந்த பொதுமக்கள் காவல்துறை கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி ஆய்வாளர் வசந்தி சுனில் பாபு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் குழந்தைகள் என கலந்து கொண்டனர்.