செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பயணிகளுடன் காணாமல் போன சிறிய ரக விமானம்

கனடாவில் சிறிய ரக விமானமொன்று பயணிகளுடன் காணாமல் போயுள்ளது. ஒன்றாரியோவின் வடக்கு பகுதியில் இந்த சிறிய ரக விமானம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் மொத்தமாக இரண்டு பேர் பயணித்துள்ளனர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.Cessna 208 Caravan என்னும் சிறிய ரக விமானம் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகீன்னா என்னும் இடத்திலிருந்து ஹோப் துறைமுக பகுதிக்கு பயணம் செய்த விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

பயணிக்க ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் வரையில் குறித்த இடத்தை அடையாத காரணத்தினால் விமானத்தின் உரிமையாளர்கள், மீட்பு பணியாளர்களுக்கு விமானம் காணாமல் போன விடயத்தை தெரிவித்துள்ளனர்.

விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் ஹெலிகொப்டர்கள், விமானங்கள் ஊடாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மழை மற்றும் பனி மூட்டத்துடனான காலநிலையினால் தேடுதல் பணிகளில் ஈடுபடுவதில் சிரமங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(Visited 38 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி