உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் ஆபத்து – தடுக்கும் வழிமுறைகள்
ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் இரத்த அழுத்தம் என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களை சேதப்படுத்தி இதய நோய் ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்கும்.
மேலும் இது சிறுநீரகங்கள் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களையும் சேதப் படுத்தும். நீரிழவு (சர்க்கரை நோய்) நோயுள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மிக மோசமான விளைவுகளை உண்டாகும்
உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்:
மங்கலான பார்வை, மயக்கம், உடல் சோர்வு, தீராத தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம்,குமட்டல் அல்லது வாந்தி இவை எல்லாம் உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளாகும்.
உயர் இரத்த அழுத்தத்தின் காரணங்கள்:
அதிக உடல் எடை (ஒபிசிட்டி), சரியான தூக்கம் இல்லாதது, புகைபிடிப்பது, மதுபானங்கள் மற்றும் அதிக கஃபைன் கொண்ட பானங்கள் குடிப்பது, முறையான உடற்பயிற்சி செய்யமல் இருப்பது,மற்றும் போதுமான அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாமல் இருப்பது. இவை எல்லாம் உயர் இரத்த அழுத்தம் ஏற்ப்பட முக்கிய காரணங்கள் ஆகும்.
உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக தடுக்கும் வழிமுறைகள்:
- போதுமான தூக்கம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானதோடு மட்டுமல்லாமல் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது
- புகைபிடித்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு,மாரடைப்பை ஏற்படுத்தும் அதிக ஆபத்தில் உங்களை தள்ளுகிறது. நீங்கள் புகைபிடிக்காமல் இருந்தால், அது உங்கள் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கும்.
- உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமான எடையுடன் வைத்திருக்கவும் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம்.
நன்றி – தினசுவடு