உக்ரைனின் தானிய இறக்குமதிக்கு தடை விதித்தது போலந்து!
உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள், மற்றும் உணவு இறக்குமதியை போலந்து தடை செய்துள்ளது.
போலந்து தனது விவசாயத் துறையைப் பாதுகாக்க மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெரிய அளவிலான உக்ரேனிய தானியங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்பட்டதை விட மலிவானவையாகும். இருப்பினும் அவை உள்ளுர் விவசாயிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது தேர்தலிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
இதன்காரணமாக தானியங்கள், மற்றும் உணவு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர், நாங்கள் உக்ரைனின் நண்பர்களாகவும் நட்பு நாடுகளாகவும் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு குடிமக்களின் நலன்களை பாதுகாப்பது கட்சித் தலைவரின் கடமை எனக் கூறினார்.
தானியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உக்ரைனுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க போலந்து தயாராக இருப்பதாகவும், உக்ரைன் தரப்புக்கு இந்த முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் காசின்ஸ்கி கூறினார்.