உலகம் செய்தி

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி – அமெரிக்கா தலையிட வேண்டும் என வலியுறுத்தல்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் தனது மூத்த தளபதி ரேத் சாத் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது

ஹமாஸ் தளபதி சாத்தின் கொலை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா தெரிவித்துள்ளார்.

இந்த கொலை உட்பட, இஸ்ரேல் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போர்நிறுத்தம் ஒக்டோபரில் ஆரம்பமானதிலிருந்து, இஸ்ரேல் காசா மீது சுமார் 800 தாக்குதல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் சுமார் 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புயல் காரணமாக ஆயிரக்கணக்கான கூடார முகாம்கள் சேதமடைந்து, மக்கள் கடும் சிரமத்தில் இருக்கும் நிலையில், மனிதாபிமான உதவிகளை காசாவுக்கு அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையிட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது.

இதனிடையே, காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கவும், ஐ.நா. வசதிகளை தாக்குவதை நிறுத்தவும் இஸ்ரேலைக் கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை ஆதரித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!