இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு தலைவர் பலி

தெற்கு காசாவில் நடந்த தாக்குதல்களின் ஹமாஸ் அமைப்பின் புலானாய்வு பிரிவின் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ஹமாஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஒசாமா டபாஸ் என தெர்விக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹமாஸ் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் இலக்கு பிரிவின் தலைவராகவும் செயற்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இதுவரை இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)