இலங்கை அரசியல் கட்சிகள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை இடைநிறுத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உறுதியாக தெரியாத நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட மட்டத்தில் நடைபெறும் பிரதான கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாமென அமைப்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளன.
எனினும், தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் கிராமிய மட்டத்திலான கூட்டங்களை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தேர்தலை நடத்ததவறிய அல்லது தேர்தலை பிற்போட எத்தனிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டப்போரை ஆரம்பிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)