இலங்கை

இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் – மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை உருவாக்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் என்று குறிப்பிட்டார்.

நுவரெலிய சீதையம்மன் ஆலயம் தொடர்பான சிறப்பு தலைப்பை இலங்கையின் பிரதமர் வெளியிட்டு வைத்து ஒருநாள் கழிந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் கருத்து வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார சூழ்நிலையின் தற்போதைய நிலை மற்றும் முன்னோக்கி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருங்கால பொருளாதார ஒத்துழைப்பின் பகுதிகளை எடுத்துரைத்தார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்