செய்தி தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் சென்றவரை 5 பேர் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்

கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் இன்று திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் வரை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் சர்புதீன் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தற்போதைய சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த சம்பவமானது பட்ட பகலிலேயே இது போன்ற துணிகர சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளது

குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டுமே 7 மேற்பட்ட கொலைகள் ஆனது நடைபெற்றுள்ளது

வீடியோ திமுக ஆட்சியில் இதுபோன்ற கொலை கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது

இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

(Visited 1 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி