இராணுவ நடவடிக்கையை இழிவுப்படுத்துபவர்களின் குடியுரிமையை பறிக்கும் ரஷ்யா!
கிரெம்ளினின் இராணுவ நடவடிக்கையை இழிவுப்படுத்துபவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய சட்டங்களின் படி ரஷ்யாவில் இராணுவ நடவடிக்கையை இழிவுப்படுத்தும் படி கருத்து தெரிவிப்பவர்களின் குடியுரிமை பறிபோகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரியில் உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் கிரெம்ளின் அதன் குடிமக்களுக்கு வழங்கிய பேச்சு சுதந்திரக் கட்டுப்பாடுகளில் சமீபத்திய சட்டங்களும் இணைகின்றன.
முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை போர், படையெடுப்பு, தாக்குதல் என விமர்சிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே அழைக்கப்பட்டது.
அதேபோல் ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் தங்கள் கடைமைகளை நிறைவேற்றும்போது பெரும்பாலான வெளிநாட்டு வார்த்தைகளை பயன்படுத்த தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது