இந்தோனேசியாவில் கோர விபத்து – 15 பேர் பலி!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
34 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (Jakarta) நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் (Yogyakarta) சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.





