இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் இலங்கையில் நடக்கும் அதிர்ச்சி செயல்
இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த நடவடிக்கையின் பிரதான முகவரான ஒருவரை மாலபே மிஹிந்து மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
சந்தேக நபருடன் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 42 கிராம் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு நவீன கையடக்கத் தொலைபேசிகள், மூன்று வங்கி அட்டைகள் மற்றும் கார் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் விசாரணைகளின் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.





