இந்தியாவின் பெருமை! துபாய் ஆட்டோட்ரோமில் அஜித்தின் ரேசிங் டீம் – மாஸ் அப்டேட்.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் தொழில்முறை ரேசர் அஜித் குமார், துபாய் ஓட்டோட்ரோமில் (Dubai Autodrome) நடைபெறவுள்ள புகழ்பெற்ற துபாய் 24H சீரிஸ் ( Dubai 24H Series )கார் பந்தயத்திற்காகக் களமிறங்கியுள்ளார்.
“இந்தியப் பெருமை துபாயில் ஓங்கி ஒலிக்கிறது” என்ற வாசகத்துடன் அஜித் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு தற்போது இணையதளத்தை கலக்கும் வாசகமாக உள்ளது.

பந்தயத்தின் பெயர் மிச்செலின் துபாய் 24H சீரிஸ்( Michelin Dubai 24H Series ) 2026.
இந்தப்போட்டி நடைபெறு இடம் துபாய் ஆட்டோட்ரோம், ஐக்கிய அரபு அமீரகம்.

அஜித் தனது சொந்த ரேசிங் அணியான அஜித் குமார் ரேசிங் ( ‘Ajith Kumar Racing’) மூலம் இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்கிறார்.
இந்தப் பெரும் பந்தயம் நாளை (ஜனவரி 17, 2026) தொடங்குகிறது. 24 மணிநேரமும் இடைவிடாமல் கார்கள் சீறிப்பாயும் இந்த ரேஸில் அஜித்தின் வேகம் சோதிக்கப்பட உள்ளது.





