ஆஸ்திரேலியாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி நிலை!

ஆஸ்திரேலியாவில், சராசரி வெப்பநிலை குறைந்து, லா நினா நிலை மறைந்து எல் நினோ நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, எதிர்வரும் மாதங்களில் கடுமையான வெப்பம் – வறட்சி நிலைகள் மற்றும் காட்டுத் தீயை கூட எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் குளிர்காலம் வரவுள்ள போதிலும் இம்முறை அதிக குளிரான காலநிலையை எதிர்பார்க்க முடியாது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடைசியாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு நிலை அறிவிக்கப்பட்டது.
அங்கு, நியூ சவுத் வேல்ஸ் தவிர அனைத்து மாநிலங்களும் எல் நினோவால் பாதிக்கப்பட்டன.
2022ல் பல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக இது கருதப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)