ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம் ஆண்டிலும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. அஸர்பைஜானிலுள்ள, ஆர்மேனியர்களைக் கொண்ட நாகோர்னோ – கராபாக் பிராந்தியம் தொடர்பாக இந்த யுத்தங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில்இ நாகோர்னோ – கராபாக் பிராந்தியம்தையும் ஆர்மேனியாவையும் இணைக்கும் லாசின் – கன்கேன்டி வீதியில் தனது முதல் சோதனைசாவடியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்தாபித்ததாக அஸர்பைஜானின் எல்லைச் சேவைப் படை தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் பின்னர் ரஷ்யாவின் அனுசரணையுடன் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி லாசின் பகுதிக்கான பாதுகாப்பான பாதையை அஸர்பைஜான் உறுதிப்படுத்த வேண்டும். அப்பகுதியில் ரஷ்ய அமைதிப் படையினர் ரோந்தில் ஈடுபடுவர்.
இந்நிலையில் சட்டவிரோதமான போக்குவரத்துஇ ஆயுதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத சுரங்க அகழ்வை தடுப்பதற்காக இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டதாக அஸர்பைஜான் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினருடன் இணைந்து இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அஸர்பைஜான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்படி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது ரஷ்யாவிற்கும் வருத்தத்தை அளித்துள்ளது.