அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மோடி கண்டனம்
அவுஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பொன்டி (Bondi) கடற்கரையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றது.
தாக்குதல் நடத்திய இருவர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், “பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலியாவின் பொன்டி கடற்கரையில் யூதர்களை இலக்குவைத்து கொடூரமாக நடந்த பயங்கர தாக்குதலை கண்டிக்கிறேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயரமான நேரத்தில் அவுஸ்திரேலியா மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.





