அரசு உயர் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை நகர மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது இதில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதிகள் உள்ளதா வகுப்பறைகள் உள்ளதா என்பதை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தமிழக பள்ளிக்கல்வித்து இப்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டுமென்று ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
எனவே இப்பள்ளிளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டும் என்று கூறி பள்ளிக் கல்வித் துறைக்கு சம்ர்பிக்கப்பட்டுள்ள அறிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கும், தமிழக அரசுக்கும் கடிதங்கள் அனுப்பி இன்னும் 40 நாட்களுக்குள் இப்பள்ளிக்கு புதிய கட்டிடப் பணிகள் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை அரசு உயர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.