இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி Minister Kumara Jayakody மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான ‘லங்கா’ உர நிறுவனத்தின் துணை கொள்வனவு முகாமையாளராக குமார ஜயக்கொடி Kumara Jayakody பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவே, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர்,கொள்வனவின் போது, தனியார் நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக நன்மை பெற உதவியதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றம்சாடியுள்ளது.

இந்த கொள்முதல் முடிவின் விளைவாக, அரசாங்கத்திற்கு 8.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 70(அ) இன் கீழ், இந்த நடவடிக்கைகள் ஊழல் குற்றமாகும் என்று கூறி ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இதுதொடர்பான குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!