அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் : 555 பேர் உயிரிழப்பு!
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தெற்கு ஈரானில் உள்ள ஒரு பெண்கள் படசாலையில் குறைந்தது 165 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தி, போர் விரிவடைந்து வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா தரப்பிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் தரப்பில் இருந்து 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




