அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் காயம்!
அமெரிக்காவின் கொலராடோ டென்வரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், தாக்குதலை மேற்கொண்ட நபரும் சுடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டென்வர் நகர் கூடைப்பந்தாட்ட அணியினர் தங்களது முதலாவது என்பிஏ கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற பகுதிக்கு அருகில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டி முடிவடைந்து மூன்று மணிநேரத்தின் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், பலர் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





