அமெரிக்காவின்முதல் குடியரசு வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிலை!
அமெரிக்காவின் முதல் குடியரசு வங்கி திவாலாகும் நிலையில் உள்ளதென தகவலட வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் முதல் குடியரசு வங்கி கடந்த ஓராண்டாக சந்தாதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்ததில் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.
மேலும் வெள்ளிக்கிழமை முதல் குடியரசு வங்கியின் பங்குகள் 40% சரிந்து கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் வங்கியின் 97% பங்குகள் வீழ்ச்சியடைந்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கியின் வாடிக்கையாளர் நலனுக்காக அமெரிக்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் முதல் குடியரசு வங்கியை கையகப்படுத்த தயாராகி வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஆலோசர்கள்,
முதல் குடியரசு வங்கிக்கு மிகப்பெரிய 11 கடன் நிறுவனங்கள் 30 பில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கிய போதிலும், தேவையான அனைத்து திட்டங்கள் செயல்படுத்திய போதிலும் வங்கியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி நிதி நிலைமையை சரி செய்ய நீண்ட கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திவாலான சிலிக்கான் வேலி வங்கியை அமெரிக்க அரசு கையக படுத்தியதை தொடர்ந்து தற்போது முதல் குடியரசு வங்கியையும் கையகப்படுத்த பைடன் அரசு முடிவு செய்துள்ளது.