அணுவாயுத பயிற்சியை முடித்த பெலாரஷ்ய வீரர்கள்!
தனது நட்பு நாடான பெலாரஸுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை பெலாரஷ்ய விமானப் படை வீரர்கள் முடித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மேற்படி பயிற்சி வகுப்பு Su-25 தரை தாக்குதல்கள். ஜெட் விமனாங்களை பயன்படுத்துவதற்கு தேவையான திறன்களை வழங்கியதாக பெலாரஷ்ய விமானி கூனுறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த மாதம் மாஸ்கோ தனது தந்திரோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் வைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
தந்திரோபாய அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் ஜூலை 1 ஆம் திகதிக்குள் பெலாரஸில் நிறைவடையும் என்று புடின் கூறினார். பெலாரஷ்ய போர் விமானங்களை அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் நவீனமயமாக்க ரஷ்யா உதவியதும் குறிப்பிடத்தக்கது.